தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை

Wait 5 sec.

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.தற்போது மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு உடனுக்குடன் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.காலை 9 மணி நிலவரப்படி தவெக வேட்பாளர் சத்யபாமா 342 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 235 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் பானுமதி 215 வாக்குகளும் பெற்றுள்ளனர்.தற்போதைய நிலவரப்படி 107 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமா முன்னிலையில் உள்ளார். இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த பொதத் தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவானதாக விமர்சனங்கள் எழுந்தன. தாராபுரம் இடைத்தேர்தலில் 80.30 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.