மதுராந்தகத்தில் விழுந்த வாக்குகள் முதல்வர் விஜய்க்காக விழுந்தவை என்று தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் என்று தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இந்தத் தொகுதியில், கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்று, இன்று (அக்.9) காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், திமுக சார்பில் இ.பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத், நாதக சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூ. சுகந்தி உள்ளிட்டோரைப் பின்னுக்குத் தள்ளி தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். பிற்பகல் 3 மணி நிலவரப்படி மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், 65,000 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.இந்த நிலையில், வெற்றி முகத்தில் இருக்கும் மரகதம் குமரவேல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.அவர் பேசுகையில், “இந்த இடைத்தேர்தலில் விழுந்த வாக்குகள் முழுக்க முழுக்க முதல்வர் அண்ணன் தளபதி விஜய்க்காக விழுந்த வாக்குகள். முதல்வர் விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று விஜய் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்” என்றார்.TVK candidate Maragatham Kumaravel has stated that the votes cast in Maduranthakam were cast for Chief Minister Vijay.