டோரதி படத்தின் கதை முடிச்சு எச்சரிக்கை (ஸ்பாய்லர் அலெர்ட் - Spoiler Alert) டிரைலர் நாளை (அக். 8) வெளியாகவுள்ளதாக அந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது,மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது. SPOILER ALERT - #Dorothy ❤️Official Spoiler Trailer from Tomorrow Anytime .... #DorothyWinsBIG #DorothyTheCinemaTheChange #DorothySpoilerTrailer https://t.co/xLy3PnLB1h— karthik subbaraj (@karthiksubbaraj) October 7, 2026இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், டோரதி திரைப்படத்தின் கதை முடிச்சு எச்சரிக்கை (Spoiler Alert) தொடர்பான விடியோ நாளை(அக். 8), எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.The film's director, Karthik Subbaraj, has announced that the trailer for Dorothy which contains spoilers will be released tomorrow (Oct. 8).மாறுபட்ட கதைக்கரு... ஆனால்! கார்த்திக் சுப்புராஜின் டோரதி - திரை விமர்சனம்!