வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்

Wait 5 sec.

இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்களைச் சேர்க்க மாவட்டங்கள்தோறும் அக்டோபர் 10 ஆம் தேதியில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "இந்தியத் தேர்தல் ஆணையம், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (SIR) நிறைவடைந்துள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இளம், முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களைப் பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.இளம், முதல்முறை வாக்காளர்களாகத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, மாவட்டங்களில் சனிக்கிழமையில் (அக். 10) சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். முதல்முறை, இளம் வாக்காளர்களின் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்பு கவனம் அளிக்கப்படும்.மேலும், தகுதியுடைய இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும்.சிறப்பு இயக்கம் குறித்து ஊடகங்கள் மூலமாகவும், மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் அதிகாரபூர்வ சமூக ஊடகக் கணக்குகள் மூலமாகவும் பரவலான விளம்பரம் செய்யப்படும். சிறப்பு நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கும், அறிவுறுத்தல்களைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள்" என்று கூறியுள்ளனர்.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தளர்வு... இனி இவர்களும் விண்ணப்பிக்கலாம்!Special drive on Oct. 10 to include names in the voters' list