தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது என மருத்துவத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று (அக். 7) தெரிவித்தார்.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுடன் அருண் ராஜ் பேசியதாவது:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) எதிராகப் போராடிய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. நாங்கள் தொடர்ந்து எஸ்.ஐ.ஆரை எதிர்க்கிறோம். தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்க வேண்டும். இருமொழிக் கொள்கையை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். அதில் எந்தவொரு சமரசமும் இல்லை எனக் குறிப்பிட்டார். எம்பிக்கள் மீது தில்லி போலீஸார் தாக்குதல்? - சாலையில் படுத்து பிரியங்கா காந்தி தர்னா!Rahul Gandhi and Priyanka Gandhi arrested: Minister Arunraj condemns the move