மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 9) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.பேட்டர்கள் அசத்தல்; மே.இ.தீவுகளுக்கு 250 ரன்கள் இலக்கு!முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். இந்த இணை அணிக்கு அதிரடியான தொடக்கத்தை கொடுத்தது. இருப்பினும், அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். இதனையடுத்து, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்டினார்.அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும். ஷிவம் துபே 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 40 ரன்களும் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), திலக் வர்மா 18 பந்துகளில் 44* ரன்களும் (3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும், ஷமர் ஸ்பிரிங்கர் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையாடி வருகிறது.Batting first in the second T20 match against the West Indies, the Indian team scored 249 runs for the loss of 5 wickets.விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்! காரணம் என்ன?