காவிரி நீர்ப் பங்கீட்டு மறுஆய்வு: கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும் - உதயநிதி

Wait 5 sec.

காவிரி நீர்ப் பங்கீட்டு அளவை மறுஆய்வு செய்யக்கோரும் கர்நாடகத்தின் முயற்சியை முறியடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி நடுவர் மன்றத்தால் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, `உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள காவிரி நதிநீர்ப் பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கர்நாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு இருப்பதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் `மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம்’ என அடம்பிடித்துக்கொண்டிருப்பதற்கும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.1970-ஆம் ஆண்டிலேயே, டாக்டர் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு, காவிரி நீர்ப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, 1990-ல் அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், முதலில் தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி வழங்கும் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது.அத்தீர்ப்பைச் செயல்படுத்தாமல் இருக்க “கர்நாடகா காவிரி நீர்ப்பாசனப் பாதுகாப்பு அவசரச் சட்டம், 1991-ஐ” கர்நாடக அரசு கொண்டு வந்தது. அதனை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது.இதன்பிறகு, 2007-ல் காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதை எதிர்த்தும் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்து- 2018-ல் உச்ச நீதிமன்றமே காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை சில மாற்றங்களுடன் உறுதிசெய்தது.மேலும், காவிரி ஆற்றுப்படுகையில் 50 சதவிகித நம்பகத்தன்மை அடிப்படையில், அனைத்து அம்சங்களையும் ஆய்வுசெய்து, பயன்படுத்தக்கூடிய மொத்த நீரின் அளவு 740 டிஎம்சி என நடுவர் மன்றம் நிர்ணயித்ததை ஏற்றுக்கொண்டது.நீர்ப் பங்கீட்டில் மட்டும் சிறிய மாற்றத்தைச் செய்து, தமிழ்நாட்டிற்கு 404.25 டிஎம்சி மற்றும் கர்நாடகாவிற்கு 284.75 டிஎம்சி என நீர்ப் பங்கு ஒதுக்கீட்டை உறுதிசெய்தது.எனவே, காவிரி நதிநீர்ப் பங்கீடு என்பது முடிவு பெற்ற - இறுதியான ஒதுக்கீடு. ஆகவே, அப்படி உறுதிசெய்யப்பட்ட காவிரி நீர்ப் பங்கீட்டை மறுபரிசீலனை செய்யவும், மறுபங்கீடு செய்யவும் கர்நாடகம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.அதே போல, மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், “அணை கட்டியே தீருவோம்” என்று கர்நாடக அரசு தொடர்ந்து வீண் பிடிவாதம் செய்துவருவது, இரு மாநில நல்லுறவுகளுக்கும் ஏற்றதல்ல.ஏற்கெனவே, `மேகேதாட்டு அணை கட்டுவது தொடர்பான பிரச்னைக்கு 1956-ஆம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவாச் சட்டத்தின் கீழ் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என கடந்த மார்ச் 4 அன்று, அன்றைய முதல்வர் திமுக தலைவர் தலைமையில், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்திடம் விரிவான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 19 அன்று, தமிழ்நாடு சட்டபேரவையில் `மேகேதாட்டு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இப்பிரச்னைக்கு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.காவிரி ஆறு, தமிழ்நாட்டின் காவிரி டெல்டா பகுதிக்கு உயிர்நாடியாக உள்ளது. இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமும், தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரமும் காவிரி நீரைச் சார்ந்துள்ளன.எனவே, ஏற்கெனவே சட்டரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட இறுதி வடிவம் பெற்ற காவிரி நீர்ப்பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய முயல்வது, தமிழ்நாட்டின் நலன்களைப் பாதிக்கக்கூடிய மேகேதாட்டு அணை திட்டத்தை மேற்கொள்வதை முதல்வர் வேடிக்கை பார்க்கக் கூடாது.கர்நாடகத்தின் இந்த முயற்சியை முதல்வர் உறுதியாக எதிர்க்க வேண்டும்.இது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு குறித்து உடனடியாக அதிகாரிகளுடன் ஆய்வுசெய்து, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, தமிழ்நாட்டின் உரிமை எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தமிழ்நாடு வரும் பிரதமரிடம், `மேகேதாட்டு அணை கட்ட நடுவர் மன்றம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். Leader of the Opposition Udhayanidhi Stalin has stated that Karnataka's attempt to seek a review of the Cauvery water-sharing allocation must be thwarted.நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நவநீதம் பிள்ளைக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!