இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 73,461 கோடி டாலராக சரிவு!

Wait 5 sec.

மும்பை: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 73,461 கோடி டாலராக சரிந்துள்ளது.இதற்கு முந்தைய வாரமான செப்டம்பர் 25 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், மொத்த கையிருப்பு 1,834 கோடி டாலர் குறைந்து 74,756 கோடி டாலராக இருந்தது.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்புத்தொகைகளுக்கான சிறப்புச் சலுகை கொண்ட 'ஸ்வாப்' திட்டத்தின் மூலம் வங்கிகள் சுமார் 13,300 கோடி டாலர் என்ற சாதனை அளவிலான நிதியைத் திரட்டியிருந்தன. இதன் விளைவாக, செப்டம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 78,571 கோடி டாலர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தை எட்டியிருந்தது.அக்டோபர் 2 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணயச் சொத்துக்களின் மதிப்பு 1,066 கோடி டாலர் குறைந்து 60,475 கோடி டாலராகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன.மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு மதிப்பு 229 கோடி டாலர் குறைந்து 10,641 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 479 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.India's forex reserves dropped by USD 734.606 billion during the week ended October 2.லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஏர்டெல் மணி!