திருத்தணி: திருத்தணியில் தியேட்டர் ஊழியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறன்றனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகள், ஏர்கன் பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (எ) ராஜா(46), சன்னதி தெருவில் உள்ள தனியார் சினிமா திரையரங்கில் பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி துர்கா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.யுவராஜின் மகள், தாழவேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அந்த சிறுவனையும், யுவராஜின் மகளையும் மிரட்டியதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக யுவராஜின் மனைவி துர்கா திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் லாரன்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்தநிலையில், லாரன்ஸ் கைது செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த சுசில் என்பவர், தனது நண்பர்களான புவனேஷ், ஹரீஷ் ஆகிய இருவரும் யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்படி, கடந்த 4 ஆம் தேதி மாலை குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு யுவராஜ் இருந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்த வந்த மர்ம கும்பல், யுவராஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலியன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.இதையடுத்து அங்கு இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் செல்போன் தகவல்களை ஆய்வு செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த சுசில் (24), அரக்கோணம் பள்ளூர் பகுதியைச் சேர்ந்த புவனேஷ் (21), ஹரிஷ் (18), அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த லாரன்ஸ்(31), அவரது சகோதரர் சுகில்(27), சுகில் மனைவி ரோஸி(25) ஆகியோருடன் சேர்ந்து, யுவராஜ் மகளுடன் பேசி வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். அத்துடன், யுவராஜ் மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சுசில் சுங்குவார்சத்திரத்தில் தங்கியிருந்து வீடியோ கால் மூலம் யுவராஜின் வீட்டை அடையாளம் காட்டி, புவனேஷ் மற்றும் ஹரிஷை கொலை செய்ய அனுப்பியது தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 3 கத்திகள் மற்றும் ஒரு ஏர்கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.போலீசார் கைது செய்ய முயன்றபோது, தப்பியோட முயன்ற சுசிலுக்கு காலில் காயம் ஏற்பட்டதால், அவர் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Theater employee hacked to death in Tiruttani: 4 arrestedதிருத்தணி முருகன் கோயிலில் பரபரப்பு: கோபுரத்திலிருந்த பரிவார மூர்த்தி சிலைகள் விழுந்து 4 பக்தர்கள் படுகாயம்