அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி மீது தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் அலுவலகம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நேற்று பேரணி நடத்தினர்.பேரணி சென்ற எம்.பி.க்களை நீதி ஆயோக் அலுவலகம் வெளியே தில்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் பகல் 1 மணியளவில் நுழைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இரவு 7 மணியலவில், அகில இந்திய வானொலி நிலையத்தில் புகுந்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் ஆதரவாளர்களை தில்லி காவல் துறை அப்புறப்படுத்தியது.குறிப்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை காவல் துறை கைது செய்து, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றது. பின்னர், நேற்றிரவு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இந்த நிலையில், அகில இந்திய வானொலி நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தல் மற்றும் அனுமதியின்றி நுழைதல் ஆகிய பிரிவுகளின் கீழ் தில்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.Delhi Police register case against Rahul and Priyanka!ரெப்போ வட்டி விகிதம் 5.50% ஆக உயர்வு! வீட்டு, வாகன கடன் வட்டி அதிகரிக்க வாய்ப்பு!