கைதி மனைவியிடம் தகாத உறவு, ரூ.20 லட்சம் லஞ்சம்! போலி தீர்ப்பு நகல் மூலம் கைதியை விடுவித்த டிஐஜி கைது!!

Wait 5 sec.

கர்நாடக மாநிலத்தில், காவல்துறையில் நடந்தேறிய மிகப்பெரிய முறைகேடு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைதியின் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்டு, அவரிடமே ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு போலியான தீர்ப்பு நகலை வைத்து கைதியை விடுதலை செய்த வழக்கில் டிஐஜி கைது செய்யப்பட்டுள்ளார்.ஆயுள் தண்டனை பெற்றிருந்த கொலை வழக்குக் குற்றவாளி ஷங்கரை 2018ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து பிறப்பித்தது போன்று போலியான தீர்ப்பு நகலை சமர்ப்பித்து, விடுதலை செய்த வழக்கில், கலாபுராகி மண்டல சிறைத் துறை டிஐஜியாக இருந்த சோமசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறைத்துறையில் பணியாற்றி வரும் மற்றொரு அதிகாரியால் கொடுக்கப்பட்ட புகாரின் கீழ் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நடத்தப்பட்டு, போலி தீர்ப்பு நகல் தயாரிக்கப்பட்டு, சிறை அதிகாரி விடுதலை செய்யப்பட்டது உண்மை என்று கண்டறியப்பட்டது.உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருந்த ஷங்கரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கைதி ஷங்கரின் மனைவியையும் டிஐஜி சோமசேகர் பாலியல் ரீதியாக துன்புறத்தியதாகவும், சட்டத்துக்கு விரோதமாக விடுதலை செய்ய ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.பரோலில் சென்று தலைமறைவான ஷங்கருக்கு சட்டத்தை மீறி சோமசேகர் மூன்று முறை பரோல் வழங்கி உத்தரவிட்டதும் சட்டத்துக்கு விரோதமானது என்று கூறப்படுகிறது.காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இவ்வாறு, கைதியின் குடும்பத்தினரிடமிருந்து லஞ்சம் பெற்றுக் கொண்டு போலியான உச்ச நீதிமன்ற தீர்ப்பு நகலை தயாரித்திருப்பதும், கைதியின் மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Illicit affair with prisoner's wife, ₹20 lakh bribe! DIG arrested for releasing prisoner using a fake judgment copy!!