ஆசியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு நாளைவிருந்தளிக்கும் முதல்வர் விஜய்!

Wait 5 sec.

ஆசியப் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்வர் ஜோசப் சி. விஜய் நாளை(அக். 8) விருந்தளிக்கவுள்ளார்.ஜப்பானில் உள்ள அய்சி மாகாணத்தின் நகோயா நகரில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதியில் 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 46 நாடுகளில் இருந்து சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.43 விளையாட்டுகளில் 469 பிரிவுகளில் பந்தயங்களும் நடத்தப்பட்டன. அதில் வென்றவா்களுக்கு 483 தங்கம், 483 வெள்ளி, 654 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவைப் பொருத்தவரை, 495 வீரர், வீராங்கனைகளுடன் போட்டியில் பங்கேற்று, 21 ஆங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என 85 பதக்கங்களுடன் 4-ஆம் இடம் பிடித்தது.தமிழக தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் உள்பட 5 பேர் தலா 3 பதக்கங்களும், தமிழகத்தின் வேலவன் செந்தில்குமார், ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), விஷால் டி.கே. (தடகளம்), கணேஷ் மணிரத்னம் (வில் வித்தை) உள்பட 23 பேர் தலா 2 பதக்கங்களுடன் வென்றுள்ளனர்.இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை முதல்வர் விஜய் நாளை சந்திக்கிறார்.அவர்களுக்கு, நாளை மாலை 5 மணிக்கு ஊக்கத்தொகையுடன் விருந்தளிக்கப்படவுள்ளது.Chief Minister Joseph C. Vijay will host a reception tomorrow (Oct. 8) for the athletes who won medals at the Asian Gamesஆசிய போட்டிகள்: கலப்பு தொடர் ஓட்டப் பிரிவில் வெள்ளி வென்ற தமிழர்களுக்கு ரூ. 50 லட்சம் அறிவித்த முதல்வர்!