டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வுக்கு 15 ஆயிரம் பணியிடங்களாக அதிகரிக்க வேண்டும்! - அன்புமணி வலியுறுத்தல்

Wait 5 sec.

டிஎன்பிஎஸ்சி தொகுதி 4 தேர்வுக்கு 6574 பணியிடங்கள் போதுமானதல்ல; 15 ஆயிரம் பணியிடங்களாக அதிகரிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டுக்கான தொகுதி 4 போட்டித்தேர்வுகளின் மூலம் 46 பணிகளுக்கு மொத்தம் 6,574 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது. அரசுத்துறைகளில் 2 லட்சத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழலில், நடப்பாண்டிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பணியிடங்களே நிரப்பப்படவிருப்பது ஏமாற்றமளிக்கிறது.தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு மிகப்பெரிய நுழைவாயிலாக திகழ்வது நான்காம் தொகுதி பணிகள் தான். முதலாம் தொகுதி பணிகளுக்கு இரட்டை இலக்கத்திலும், பிற பணிகளுக்கு 3 இலக்கத்திலும் மட்டுமே பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், நான்காம் தொகுதி பணிகளுக்கு மட்டுமே ஆயிரக்கணக்கில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவதால், அதற்கான அறிவிப்பையே இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நான்காம் தொகுதி பணிக்கான ஆள்தேர்வு அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மிகக்குறைந்த காலியிடங்களே அறிவிக்கப் பட்டிருப்பதால், அரசு வேலைக்கு செல்லலாம் என நினைத்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே விஞ்சியுள்ளது.தமிழ்நாடு அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சிகள் ஆகியவற்றில் ஒட்டுமொத்தமாக 6.50 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அவற்றில் நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த இடங்கள் அனைத்தையும் நிரப்பாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் அதில் 10 விழுக்காடு இடங்களையாவது நிரப்ப வேண்டும் என்பது தான் படித்த இளைஞர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், புதிதாக ஏற்பட்ட காலியிடங்களை விட குறைவாக 6,574 இடங்களை மட்டும் நிரப்புவதை ஏற்க முடியாது.நடப்பாண்டில் மட்டும் தான் என்றில்லாமல் கடந்த சில ஆண்டுகளாகவே நான்காம் தொகுதி பணியிடங்கள் மிகக் குறைந்த அளவிலேயே நிரப்பப்பட்டு வருகின்றன. 2022-ல் நடைபெற்ற தொகுதி 4 தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022-23, ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கு சேர்த்து, 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது ஆண்டுக்கு 3380 பணியிடங்கள் வீதம் நிரப்பப்பட்டன. ஆனால், 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4466 வீதம் 8,932 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வின் மூலம் 4,662 இடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது கடந்த 6 ஆண்டுகளில் 23,733 நான்காம் தொகுதி பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 3,955 பணியிடங்களை மட்டுமே நிரப்புவது எந்த வகையிலும் போதுமானதல்ல.2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலமாகவும், இரு லட்சம் புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதன் வாயிலாகவும் மொத்தம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 94,191 பேருக்கு மட்டுமே அரசு வேலைகள் வழங்கப்பட்டன. அரசு வேலைகளை வழங்குவதில் திமுக அரசு தோல்வியடைந்தது.திமுக அரசின் இந்த தோல்வியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று 2026 தேர்தலின் போது தவெக வாக்குறுதி அளித்தது. அதை நிறைவேற்றும் வகையில், நடப்பாண்டில் மிக அதிக எண்ணிக்கையில் நான்காம் தொகுதி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று படித்த இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், முந்தைய திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் தொகுதி&4 பணியிடங்கள் நிரப்பப்படுவது இளைஞர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.தமிழ்நாட்டில் ஒரு கோடியே 30 லட்சம் படித்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கு ஏற்ற கண்ணியமான வேலை கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்பு, மேற்படிப்பு முடித்து விட்டு 6 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு சந்தைக்கு வருகின்றனர். அவர்களில் 10 விழுக்காட்டினருக்கு வேலை வழங்குவதாக இருந்தாலும் ஆண்டுக்கு குறைந்தது 60 ஆயிரம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதில் ஐந்தில் ஒரு பங்கினருக்குக் கூட அரசு வேலைகள் வழங்கப்படுவதில்லை என்பது தான் கடந்த பல பத்தாண்டுகளாக நீடிக்கும் அநீதி ஆகும்.அதற்கு முடிவு கட்டும் வகையில் நடப்பாண்டில் குறைந்தது 60 ஆயிரம் பேருக்காவது அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும்; நான்காம் தொகுதி போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ள காலியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். TNPSC has announced that a total of 6,574 candidates will be selected for 46 posts through the Group IV competitive examination to be conducted in 2026.ஸ்டாலின் ரூ.1,000 கோடி செலவு பண்ணாருனு நானும் ஏஐ விடியோ வெளியிடவா? - ஆதவ் அர்ஜுனா