விக்கெட் கீப்பிங் பயிற்சி எதற்காக? பேட்டிங்கில் கவனம் செலுத்த ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் வீரர் அறிவுரை!

Wait 5 sec.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக ரஞ்சி கோப்பை மும்பை அணியின் கேப்டன் சித்தேஷ் தெரிவித்தார். விக்கெட் கீப்பிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.வாசிம் ஜாஃபர்இது தொடர்பாக அவர் பேசியதாவது: யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதைக் கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுவயதிலிருந்து விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் திடீரென விக்கெட் கீப்பிங் செய்வது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி, விக்கெட் கீப்பருக்கு வேலைப்பளு அதிகம். ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பிங் மேற்கொண்டு நன்றாக செயல்படுகிறார் என வைத்துக் கொண்டாலுமே அணியில் எங்கு இடமிருக்கிறது. அணியில் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பந்த் போன்ற விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள்.யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெள்ளைப் பந்து போட்டிகளில் விக்கெட் கீப்பராகவே பயிற்சியில் ஈடுபடுகிறார் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவது மிகவும் கடினம். ஆனால், சிறுவயதிலிருந்து விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடாமல் திடீரென விக்கெட் கீப்பராக முயற்சிப்பது சற்று வேடிக்கையாக உள்ளது. நீங்கள் வேகமாக வளர்த்துக் கொள்ளும் அளவுக்கு விக்கெட் கீப்பிங் திறமை என்பது அவ்வளவு எளிது கிடையாது. ரஞ்சி கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்கள் வருவதால் ஜெய்ஸ்வால் அவரது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.A former Indian player has stated that Indian opener Yashasvi Jaiswal should focus on batting instead of engaging in wicket-keeping practice.ஈரப்பதம் வந்துவிட்டால் எல்லாமே கடினம்..! தோல்விக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!