மத்திய துணை ராணுவப் படைகளில் ஒன்றான சிஆர்பிஎஃப்-ல் நிரப்பப்பட உள்ள 521 காவலர் மற்றும் தலைமைக் காவலர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்தியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட இளம் ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: R-11-21/2026-Sportsபணி: Constable (General Duty (Sports Quota)-2025) காலியிடங்கள்: 339(ஆண்கள் 258; பெண்கள் 81)தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.21,700-69,100வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.பணி: Head Constable (General Duty) (Sports Quota-2026)காலியிடங்கள்: 182(ஆண்கள் 150; பெண்கள் 32)தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100வயதுவரம்பு: 1.8.2026 தேதியின்படி 18 முதல் 23-க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரரின் விளையாட்டுத் திறன், உடற்தகுதி, மருத்துவத்தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். தகுதியானவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாள், இடம் போன்ற விபரங்கள் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.விளையாட்டு சாதனைகள் 30.9.2024-30.9.2026-கும் இடைப்பட்ட காலத்தில் புரிந்திருக்க வேண்டும். உடற்தகுதிகள்: ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ. உயரமும், எஸ்டி பிரிவினர்- 162.5 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும். மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ. அகலமும், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ. அகலம் இருக்க வேண்டும்.பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், (எஸ்டி பிரிவினர் 150 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். அனைவரும் உயரத்திற்கேற்ற உடல் எடையும் இருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. கட்டணத்தை விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்கள், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: www.rect.crpf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.11.2026 விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். RECRUITMENT OF MERITORIOUS SPORTSPERSONS FOR THE POST OF HEAD CONSTABLE AND CONSTABLE (GENERAL DUTY) UNDER SPORTS QUOTA-2026 IN CRPF.மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?