அற்புதம், அழகு, அதிசயம்... டோரதி படக்குழுவை நேரில் வாழ்த்திய ரஜினி!

Wait 5 sec.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான டோரதி திரைப்படத்தினைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படக்குழுவை வரவழைத்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான டோரதி திரைப்படம் மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாக எடுக்கப்பட்டுள்ளது.கடந்த செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடக்கத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பின்னர் பிரபலங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை தனுஷ், சூர்யா, மணி ரத்னம், உபேந்திரா என பலரும் பாராட்டியுள்ளார்கள். இந்த நிலையில், நடிகர் ரஜினி கார்த்திக் சுப்புராஜ், சனத், ரிஷிகாந்த்தைப் பாராட்டியுள்ளார். இது பற்றி கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது: தலைவா... ‘அற்புதம்... அழகானது... அதிசயக்க வைத்தது’ என தலைவர் ரஜினி பாராட்டினார். டோரதி படத்தைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். இதற்கு மேல் எதுவும் கேட்கமுடியாது. எங்கள் உரையாடலில் அவர் சொன்ன, ‘இந்த கார்த்திக் சுப்புராஜைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். ஹாட்ஸ் ஆஃப்’ எனக் கூறியதை எப்போதும் மறக்க மாட்டேன். காற்றில் பறக்கிறேன். லவ் யூ தலைவே எனக் கூறியுள்ளார். டோரதி படம் இளையராஜாவின் 1540ஆவது படம். பாடல், பின்னணி இசை என இளையராஜா அசத்தியிருந்தார். இந்தப் படத்தை சிக்யா என்டர்டெயின்மென்ட், தம்மம் பிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. Thalaivaaaaa.... ❤️❤️'Fantastic..Beautiful... Mindblowing' !!Thalaivar Loveeedd #Dorothy and spoke in detail for an hour appreciating every aspect of the film.... Can't ask for more.... Will forever remember the conversation & him saying....."Intha Karthik Subbaraja… pic.twitter.com/DjXVj6bGcY— karthik subbaraj (@karthiksubbaraj) October 10, 2026பாட்ஷா 2, பேட்ட 2 சம்மதிக்காமல் ஜெயிலர் 2 மட்டும் எதற்காக? ரஜினி விளக்கம்!Rajinikanth meets Karthik Subbaraj, Rishikanth, Sananth; praises Dorothy: 'Mindblowing…'