சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட மத்திய - மாநில ஆய்வக துணைக் கட்டடத்தையும் முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தார். அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருள்களை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணைய அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 152 கோடியில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஒரு புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. அதையும் முதல்வர் பார்வையிட்டார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மாதவரம் பால் பண்ணையில்தான் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீபமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. CM Vijay inaugurated the laboratory at the Aavin milk dairy in Madhavaram, Chennai