பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் (75) வியாழக்கிழமை அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் மயங்கிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.கோவாவில் உள்ள தனது வீட்டில் சுய நினைவை இழந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மணிபால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.மறைந்த நானா படேகருக்கு அரசியல், திரைப் பிரபலங்கள், அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நானா படேகரின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், நடிகர் ரஜினி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் நானா படேகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.அந்தப் பதிவில், “அன்புக்குரிய நண்பர் நானா பாடேகர் நம்முடன் இல்லை என்ற செய்தியை நம்பவே முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமான நானா படேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஹரிதாதா என்ற வேடத்தில் அவர் நடித்திருந்தது நினைவுகூரத்தக்கது.Rajinikanth has expressed his condolences over the passing of Bollywood actor Nana Patekar.பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!