ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தாய் காலமானார்!

Wait 5 sec.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தாயாரும், முன்னாள் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான ஷிபு சோரனின் மனைவியுமான ரூபி சோரன் புதன்கிழமை நள்ளிரவு காலமானார்.80 வயதான ரூபி சோரன், ஹைதராபாத் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து ராஞ்சி திரும்பினார்.இந்த நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.கடந்த 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தில்லியில் ஷிபு சோரன் காலமானார். அவர் மறைவுக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை, சமீபத்தில் ரூபி சோரன் பெற்றார்.ரூபி சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், ”ரூபி சோரனின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. பழங்குடியின சமூகங்களை மேம்படுத்துவதற்காக அவர் எப்போதும் பாடுபட்டார். துயரத்தின் இந்த வேளையில், ஹேமந்த், கல்பனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் தெரிவிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Jharkhand Chief Minister Hemant Soren's mother has passed away!