கருவிழி... ஹைக்கூ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

Wait 5 sec.

ஹைக்கூ படத்தின் முதல் பாடல் இன்று வெளியானது.இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி இயக்கத்தில் நடிகர் ஏகன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ஹைக்கூ. பெண்கள் கல்லூரியில் படிக்கும் ஒரே ஆண் மாணவனுக்கு இரண்டு காதல்கள் அமைவதாக, கல்லூரி கால காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.இதில் ஸ்ரீதேவி, ஃபெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண் ஆகியோர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் முதல் பாடலான ‘கருவிழி’ இன்று வெளியாகியுள்ளது. மோகன்ராஜன் எழுதிய இப்பாடலை அர்மான் மாலிக் பாடியுள்ளார்.ஹைக்கூ திரைப்படம் அக். 23 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! First song from the movie 'Haiku' released!