தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடல்!

Wait 5 sec.

கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் (சிஜேபி) போராட்டம் காரணமாக தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் இரவு 10 மணி வரை மூடப்படுவதாக தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் சனிக்கிழமை அறிவித்துள்ளது. முன்னதாக மாலை 6 மணிக்குத் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த ரயில் நிலையங்கள், சனிக்கிழமை இரவு 10 மணி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று டி. எம். ஆா். சி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. தில்லி காவல்துறையின் கோரிக்கையை ஏற்று, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் முதன்முதலில் அமல்படுத்தப்பட்டன.ஆரம்பத்தில் 57 மெட்ரோ நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 45 நிலையங்களாகக் குறைக்கப்பட்டது. புதுதில்லி மெட்ரோ ரயில் நிலையத்தைத் தவிர, பாதிக்கப்பட்ட மற்ற அனைத்து நிலையங்களிலும் பயணிகள் ரயில் மாறும் வசதி வழக்கம் போலச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) நடைமுறையில் முறைகேடு செய்ததாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி சிஜேபி கட்சி இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. The Delhi Metro Rail Corporation (DMRC) on Saturday extended the closure of entry and exit gates at 45 metro stations by four hours till 10 pm amid security arrangements for the CJP protest in the national capital.ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு!