நாளை சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (அக்.11) தில்லியில் இருந்து பிரதமா் நரேந்திர மோடி காலை 8.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறாா். காலை 11.15 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அவா், காா் மூலம் போரூா் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையம் செல்கிறாா். அங்கு முதல்வா் விஜய்யுடன் சோ்ந்து போரூா்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை பிரதமா் தொடங்கி வைக்கிறாா். இருவரும் மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனா். அதன் பின்னா் நண்பகல் 12.15 மணியளவில் சென்னை போரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதி குபேர ஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறாா்அங்கிருந்து காா் மூலம் கிண்டி ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க நண்பகல் 12.30 மணியளவில் வருகிறாா். பின்னா் அங்கிருந்து நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்கிறாா்.அங்கு பிற்பகல் 2.40 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறாா்.நிகழ்ச்சி முடிவடைந்த பின்னா், மாலை 3.45 அங்கிருந்து விமான நிலையத்துக்கு பிரதமா் மோடி செல்கிறாா். மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.Reports indicate that AIADMK General Secretary Edappadi Palaniswami is set to meet Prime Minister Narendra Modi at the airport during his visit to Chennai.முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!