நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் “பாக்கெட் நாவல்”. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இளையராஜா இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில், “பாக்கெட் நாவல்” திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக, இன்று (அக்.9) படக்குழுவினர் சிறப்பு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர். முன்னதாக, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. View this post on Instagram மமிதா பைஜூ - சங்கீத் பிரதாப் நடிக்கும் ஹலோ டியர்! வெளியீட்டுத் தேதி! filming of the movie Pocket Novel, starring Vijay Sethupathi in the lead role, has been completed.