நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 'நேஷ் வில்' பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இந்து ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார். காமெடி ஹாரர், திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தை அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமிதத்துடன் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. படக் குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.நடிகர் நெப்போலியன் பேசுகையில், ''இந்த திரைப்படத்தில் 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இதில் நடித்திருக்கும் அனைவரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம். சிவாஜி நடித்த பாரத விலாஸ் படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்'' என்றார். The audio and trailer launch event of the movie 'America Aavi', starring Napoleon, was held in Chennai.கருவிழி... ஹைக்கூ படத்தின் முதல் பாடல் வெளியீடு!