எனக்குதான் அதிக பிரச்னை; தாராபுரம் மக்களுக்கு நன்றி: சத்தியபாமா

Wait 5 sec.

மதுராந்தகத்தில் போட்டியிட்ட மரகதத்தை விட எனக்குத்தான் அதிக பிரச்னைகள் கொடுக்கப்பட்டன. ஆனால் எல்லாவற்றையும் தாண்டி என்னை வெற்றிபெறச் செய்த தாராபுரம் மக்களுக்க நன்றி என்று தவெக எம்எல்ஏ சத்தியபாமா தெரிவித்துள்ளார்.தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய தாராபுரம் தவெக எம்எல்ஏ சத்தியபாமா, தேர்தலில் நாங்கள் தாராபுரத்தில் என்னை பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார்கள். என் மீது பல பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். எல்லாவற்றையும் தாண்டி தாராபுரம் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர்.அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பேன். தண்ணீர் வசதி உடனடியாக செய்து கொடுக்கப்படும் என்று சத்தியபாமா உறுதியளித்துள்ளார்.