சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 1,10,720 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை(அக். 12) காலை கிராமுக்கு ரூ. 40 குறைந்து ரூ.13,840-க்கும், சவரனுக்கு ரூ. 320 குறைந்து, ரூ. 1,10,720 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய வெள்ளி விலைஅதேநேரம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி வெள்ளி விலை கிராம் ரூ. 245-க்கும், கிலோ ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. chennai gold and silver rate today