நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ரணபாலி படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.இயக்குநர் ராகுல் சங்கிருதயன் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா புதிய திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ரணபாலி எனப் பெயரிடப்பட்டுள்ளது.மிகப்பெரிய பட்ஜெட்டில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நாயகியாக ரஷ்மிகா நடித்துள்ளார்.1870-களில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தென்னிந்தியாவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்த்து, அதனைத் தட்டிக்கேட்ட நாயகனின் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது.இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பேனரின் கீழ் நவீன் எர்னேனி மற்றும் ரவிசங்கர் ஆகியோர் தயாரித்துள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் குல்ஷன் குமார், பூஷன் குமார் ஆகியோர் வழங்குகின்றனர்.அஜய்-அதுல் இசையமைத்துள்ள இந்தப் படம், தசரா திருநாளை முன்னிட்டு வரும் அக். 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.இந்த நிலையில், ரணபாலி படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வெளியான ஒரு மணி நேரத்தில் 4 லட்சம் பேர், இந்த விடியோவை பார்த்துள்ளனர்.The film crew has released the trailer for actor Vijay Deverakonda's movie Ranabaali.ஊரை மிரட்டும் டானுக்கே இந்த நிலைமையா? பத்தா - திரை விமர்சனம்!