சௌதியுடன் ஒப்பந்தம்! ஆனால், ஹௌதிக்கு எதிராக படைகளை அனுப்ப துருக்கி மறுப்பு!

Wait 5 sec.

யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படைகளுக்கு எதிராக ராணுவப் படைகளை அனுமாட்டோம் என துருக்கி அரசு அறிவித்துள்ளது. யேமனில் சௌதி அரேபியாவின் ஆதரவைப் பெற்ற அரசுப்படைகளுக்கும், ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகின்றது. இந்த மோதலின் மூலம் யேமனின் பெரும் பகுதியை ஹௌதிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, முத்தரப்புப் பாதுகாப்புக்கான “மெக்கா ஒப்பந்தம்” சௌதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி அரசுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், சௌதிக்கு ஆதரவாக துருக்கி மற்றும் பாகிஸ்தானின் ராணுவப் படைகள் ஹௌதிகளுக்கு எதிராகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், மற்றொரு நாட்டின் பகுதிக்குள் தாக்குதல் நடத்த துருக்கி அதன் ராணுவப் படைகளை அனுப்பாது என துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹாகான் ஃபிதான் இன்று (அக். 8) அறிவித்துள்ளார். இதுபற்றி, அவர் கூறுகையில், “மெக்கா ஒப்பந்தம் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம். ஏதேனும் ஒரு நாடு தாக்கப்பட்டால், அதன் தற்காப்புக்கு ஆதரவளிப்போம். இது தாக்குதல் நடத்துவதற்கான ஒப்பந்தம் அல்ல. தாக்குதல் நடத்துவதற்காக மற்றொரு நாட்டின் எல்லைக்குள் துருக்கி அதன் படைகளை அனுப்பாது” எனத் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரத்தில், சௌதி அரசுக்கு தேவைப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இருதரப்பும் ஒன்றிணைந்து செயல்படும் எனவும் அமைச்சர் ஃபிதான் கூறியுள்ளார். முன்னதாக, சௌதி, பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையே மேற்கொள்ளப்பட்ட முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.அம்பானி இந்தியாவின் முதலாளியா? எலான் மஸ்க் கடும் தாக்குThe Turkish government has announced that it will not send military forces against Yemen's Houthi rebels.