இதுதான் ஊழலற்ற ஆட்சியா? ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் மீது கனிமொழி எம்.பி. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

Wait 5 sec.

ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன் மீது திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து கனிமொழி எம்.பி.யின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "திருவைகுண்டம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன், ஆதிதிராவிடர் நலவாரிய உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி வைணவப் பெருமாள் என்பவரை ஏமாற்றி லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலற்ற ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களின் உண்மை முகம் இதுதான்.ஆட்சிக்கு வந்த புதிதிலேயே, பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கிலும் இதே சட்டப்பேரவை உறுப்பினர் மீது பாதிக்கப்பட்ட பெண் குற்றஞ்சாட்டினார். அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு என்ற பெயரில் மருத்துவரை அவமானப்படுத்தியவரும் இதே நபர்தான்.எனது தூத்துக்குடி தொகுதி மக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாக இந்த நபர் இருக்கிறார் என்பது மேலும் கவலையளிக்கிறது.மக்களின் பிரதிநிதியாக நீடிக்கத் தகுதியற்ற சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.முதல்வர் விஜய் ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு: இபிஎஸ் கடும் விமர்சனம்DMK MP Kanimozhi levels allegations against Srivaikuntam TVK MLA Saravanan