எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிஜேபி சார்பில் தில்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள், செய்தியாளர்கள் என பலரையும் காவல்துறை கைது செய்தனர்.போராட்டத்தை ஒருங்கிணைத்த சிஜேபியின் நிறுவனரான அபிஜீத் தீப்கே உள்பட முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.காங்கிரஸ் சார்பில் இன்று நடைபெற்ற உச்சநீதிமன்றத்தை நோக்கிய பேரணியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், எஸ்ஐஆர் தொடர்பாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முதலில் வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலம் மோசடி செய்தார்கள். பிறகு எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி மோசடி செய்தார்கள். தற்போது, தலைமைத் தேர்தல் ஆணையரே மோசடி பேர்வழி என்பது அம்பலமாகி இருக்கிறது. ஆனாலும் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நம்பச் சொல்கிறார்கள்? ஜனநாயகம் காப்போம்! வாக்குரிமை காக்க களம் காண்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விCPI(M) State Secretary P. Shanmugam has commented on the SIR issue.