காங்., கூட்டணியில் இருக்கும் தவெக ஏன் போராடவில்லை? மாணிக்கம் தாகூருக்கு திமுக கேள்வி

Wait 5 sec.

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தவெக ஏன் போராடவில்லை என மாணிக்கம் தாகூர் கேட்க வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது.இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி காங்கிரஸ் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை என்றும் இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை என திமுக பதில் அளித்துள்ளது.தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் ஏன் பங்கேற்கவில்லை என மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் போராட்டத்தை சுட்டிக்காட்டி திமுக பதிவிட்டுள்ளதாவது:''தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.” என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆருக்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.பதவிக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் கேட்க வேண்டும்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர்… pic.twitter.com/apNVYS2Gu5— DMK (@arivalayam) October 12, 2026இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விWhy hasn't TVK which is in the Congress alliance staged a protest? DMK questions Manickam Tagore