தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் நடைபெறவுள்ள கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையிலான போராட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில், சட்டவிரோதமாகத் தன்னிச்சையாகச் செயல்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து, ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என சிஜேபி அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் தில்லி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தில்லி ஜந்தர் மந்தரில் நடைபெறவுள்ள சிஜேபி தலைமையிலான போராட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்கும் என அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், “சிஜேபியின் போராட்டம் ஜனநாயகத்தைக் காப்பாற்றும். அக்.2 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்திலும் நாங்கள் கலந்துகொண்டோம். வாக்குத் திருட்டைத் தடுக்கவும், எஸ்ஐஆர் பணிகளை முடக்கவும், அதன்மூலம் நடத்தப்பட்ட மாநிலத் தேர்தல்களை ரத்து செய்யவும், வாக்குச்சீட்டு முறையில் மீண்டும் தேர்தலை நடத்தவும், உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யவும் வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் அக்.10 ஆம் தேதி தொடங்குகிறது. இது எங்களின் போராட்டம் அல்ல, சிஜேபியின் போராட்டம். கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தில் சமாஜவாதி, இடதுசாரிகள், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பங்கேற்றோம். மீண்டும் அனைவரும் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்போம்” எனத் தெரிவித்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! முர்முவைச் சந்திக்கும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்!It has been announced that the Aam Aadmi Party will participate in a protest led by the cjp in Delhi against CEC Gyanesh Kumar.