அபிஜீத் தீப்கே எங்கே? காவல்துறையால் கடத்தப்பட்டதாக சிஜேபி குற்றச்சாட்டு!

Wait 5 sec.

கைது செய்யப்பட்ட சிஜேபி நிறுவனர் அபிஜீத் எங்கே என காவல்துறையினரிடம் அக்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.இதில், கலந்துகொண்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள், இளைஞர்கள், செய்தியாளர்கள் பலரும் இன்று காலை முதல் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர்களான மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், பினராயி விஜயன் ஆகியோரும் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், தில்லியில் போராட்டத்தை முன்னெடுத்த சிஜேபி கட்சியின் நிறுவனரான அபிஜீத் தீப்கேவை காவல்துறையினர் எங்கு அடைத்து வைத்துள்ளனர் எனத் தெரியவில்லை என சிஜேபி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.அபிஜீத் தீப்கே இன்று காலை விமானத்தில் தில்லி வந்தபோது அவருடன் சேர்த்து சிஜேபி முக்கியத் தலைவர்கள் இருவரையும் காவல்துறையினர் விமானத்தில் வைத்து கைது செய்தனர். அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.இதனைத் தொடர்ந்து, அபிஜீத் தீப்கேவின் பாட்டி இன்று மறைந்ததாகச் செய்திகள் வெளியானது. அவரது மறைவு தொடர்பாக அபிஜீத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். இதுதொடர்பாக கண்டனம் தெரிவித்த சிஜேபி கட்சியினர், ”அபிஜீத் தீப்கேயின் குடும்பத்தினருக்கோ அல்லது சிஜேபி வழக்குரைஞர்களுக்கோ அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை” எனப் பதிவிட்டிருந்தனர். சிஜேபி-இன் மூன்று தலைவர்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்ட அவர்கள் தற்போது வரை அவர்களை வைத்திருக்கும் இடம்பற்றி காவல்துறை தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். சிஜேபி கட்சியின் சமூக ஊடகப் பதிவில், “தில்லி காவல்துறை அபிஜீத் திப்கே, அஷுதோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரைக் கடத்திக் கொண்டுபோய் 10 மணி நேரம் ஆகிவிட்டது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று இன்னும் தெரியவில்லை. அவர்களுடன் தொடர்புகொள்ள முடியவில்லை. தில்லி காவல்துறை அவர்களை எங்கே வைத்திருக்கிறது? ஒருவரை இப்படிக் கடத்தி வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” எனக் குறிப்பிட்டுள்ளனர். THIS IS AN EMERGENCY IT HAS BEEN 10 HOURS SINCE DELHI POLICE ABDUCTED ABHIJEET DIPKE ASHUTOSH RANKA AND SAURAV DAS. WE STILL DON’T KKOW WHERE THEY ARE, WE HAVE NO CONTACT WITH THEM. WHERE IS DELHI POLICE HOLDING THEM? HOW CAN IT BE ACCEPTABLE TO ABDUCT SOMEONE LIKE THIS?— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 10, 2026மற்றொரு பதிவில், அபிஜீத்தின் பாட்டி மறைவைத் தொடர்ந்து அபீஜீத்தை வீட்டிற்கு அனுப்பவிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்ட சிஜேபி கட்சியினர், “வாயை மூடுங்கள். அபிஜீத் எங்கே எனக் கூறுங்கள். அவரது குடும்பத்தினர் அவரிடம் பேசவேண்டும் எனக் கேட்கின்றனர். நாளை காலை அவரது பாட்டியின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. குறைந்தபட்சம் அவரிடம் பேசுவதற்கான உரிமையாவது அவர்களுக்கு வேண்டும். கைது செய்யப்பட்ட அனைவரையும் இப்போதே விடுவியுங்கள்” எனத் தெரிவித்துள்ளனர். Stfu where is Abhijeet? His family wants to talk to him, they’re going to perform his grandmother’s last rites tomorrow morning. The least they deserve is to talk to him. RELEASE ALL DETAINEES NOW— Cockroach Janta Party - CJP (@Cockroachisback) October 10, 2026தொடர்ந்து போராடுங்கள், நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்: ராகுல் காந்திWhere is Abhijit Deepke? CJP alleges abduction by the police!