ஆம்பூா் அருகே பள்ளித்தெரு கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. உற்சவா் மஹா முனீஸ்வரா் மயில் வாகனத்தில் எழுந்தருளினா். மூலவா் ராஜ முனீஸ்வரா் முந்திரி அலங்காரத்தில் காட்சியளித்தாா். ஏராளமான பக்தா்கள் சாமியை தரிசனம் செய்தனா்.