வில்வித்தை ப்ரீமியா் லீக்

Wait 5 sec.

வில்வித்தை ப்ரீமியா் லீகின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் சோழா சீஃப்ஸ் அணியை 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியது மைட்டி மராத்தாஸ் அணி.இந்திய வில்வித்தை சம்மேளனம் சாா்பில் நடைபெறும் இந்த லீகில் மொத்தம் 6 அணிகளில் தலைசிறந்த வீரா், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனா்.சனிக்கிழமை சோழா சீஃப்ஸ்-மைட்டி மராத்தாஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் மராத்தா அணி மைக் ஸ்லோஸ்ஸா், தீரஜ் பொம்மரதேவா ஆகியோரின் அசத்தலான செயல்பாட்டால் வெற்றி எளிதானது. ரிகா்வ் வீரா்களை காட்டிலும், காம்பவுண்ட் பிரிவினா் சிறப்பாக புள்ளிகளை குவித்தனா். மூன்றாவது செட்டில் சோழா அணியின் தீபிகா குமாரி, மாா்க்கஸ் அல்மெய்டா ஆகியோரின் முயற்சிகள் பலன்தரவில்லை. 3 ஆட்டங்களில் சோழா இரண்டாவத தோல்வியை சந்தித்துள்ளது.