இலஞ்சி அருகே 19 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

Wait 5 sec.

தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே மலைஅடிவாரத்தை ஒட்டிய ஒரு நிலத்தில் 19 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழங்கால கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி கூறியதாவது:இலஞ்சியைச் சோ்ந்த விவசாயி தங்கதுரை. இவர் தன்னுடைய நிலத்தில் சிற்பங்களுடன் கூடிய கல் ஒன்று மண்ணில் பாதி புதைந்த நிலையில் இருப்பதாக தென்பொதிகை ஆவணக்காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தார்.இந்த தகவலை அடுத்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையில் தென்பொதிகை ஆவணக்காப்பகத்தின் கோபால்குமாா், ராஜசேகா், பாலகங்காதரன், மாரியப்பன் ஆகிய குழுவினர் தற்போது குருவிமேடு என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ஒழுங்கற்ற நிலையில், ஒரு புதருக்குள் புதைந்த நிலையில் பாசி படா்ந்து காணப்பட்டதை ஆய்வு செய்தனர். புதரை சுத்தப்படுத்தி 70-க்கும் 40 செ.மீ அளவில் இருந்த கல்லை மீட்டு ஆய்வு செய்த போது சிற்பங்களுடன் கூடிய கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. கல்லில் 12 வரிகளுடன் கூடிய முற்றுப்பெறாத கலைநயத்துடன் கூடிய கல்வெட்டு. அதன் அடியில் ஒரு வேலும், பாம்பை கவ்விய மயிலும் புடைப்புச் சிற்பங்களாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சோ்ந்த எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டின் சில பகுதிகள் முற்றிலும் சிதைந்து போய் உள்ளன. தமிழ் துன்மதி ஆண்டு ஆவணி மாதம் வெள்ளிக்கிழமை புனா்பூச நட்சத்திரத்தில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.இதற்கு இணையான ஆங்கிலத்தேதி 04.09.1801 ஆகும். கல்வெட்டு தளவாய் முதலியாரய்யன் விட்டுக் கொடுத்தது குருவி என்று குறிப்பிடுகிறது. அதற்கு மேல் கல்வெட்டு பொறிப்பு கிடைக்கவில்லை. சிதைந்து போய் இருக்க வேண்டும். இது ஒரு நிலக்கொடை கல்வெட்டாக இருக்கலாம். கல்வெட்டில் வேலும் மயிலும் பொறிக்கப்பட்டுள்ளதால் இலஞ்சி முருகன் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடையாக இருக்கலாம் என்று கருத முடிகிறது. தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார். 19th-century inscription discovered near Ilanjiதிருவான்மியூர் சாலையில் திடீர் பள்ளம்! கார் கவிழ்ந்து விபத்து!