ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம்! தீவிரப்படுத்த இந்தியா கூட்டணி திட்டம்!

Wait 5 sec.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் நடத்தும் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவா் பதவி விலகக்கோரி, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.தொடர்ந்து, தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேருந்தில் சென்றனர். அந்த பேருந்துகளை காவல்துறையினா் நடுவழியில் தடுத்து நிறுத்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களை நேற்றிரவே காவல்துறையினர் விடுவித்தனர்.இந்த நிலையில், ஞானேஷ் குமாருக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை இன்று நடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர். இந்த போராட்டத்தில், முழு அளவிலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பதை உறுதி செய்ய அந்தந்த கட்சித் தலைமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து, எஸ்.ஐ.ஆர். நடைமுறை மற்றும் ஞானேஷ் குமாருக்கு எதிராக புகார் மனு அளிக்க இந்தியா கூட்டணி நேரம் கேட்டிருந்தது.இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 15 தலைவர்கள் குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில், 10 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் பிரதிநிதிகள் குழுவில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருப்பினும், குடியரசுத் தலைவரை சந்திக்கும் நேரம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.Protest against Gyanesh Kumar! INDIA bloc plans to intensify it!தில்லியில் போராட்டம்: ராகுல் காந்தி மீண்டும் கைது