நடிகர் நானா படகேரின் மறைவைத் தொடர்ந்து அவரின் உடற்பயிற்சி விடியோ வைரலாகி வருகிறது. இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர் நானா படேகர் (75). ஹிந்தியிலும் மராத்தியிலும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்து சிறந்த குணச்சித்திர, வில்லன் கதாபாத்திரங்களுக்கு பல விருதுகளையும் வென்றார். தமிழில் பொம்மலாட்டம் திரைப்படத்தில் தனித்துவமான கவனம் பெற்ற நானா படேகர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து காலா திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து பாராட்டுகளைப் பெற்றார். தற்போது, நானா படேகர் இன்று (வியாழக்கிழமை ) அதிகாலை காலமானார். கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் மயங்கிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, 45 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக உயிர் காக்கும் ஆஞ்சியோ அளிக்கப்பட்ட போதிலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. நானா படேகரின் இந்த மறைவு இந்திய அளவில் பல மொழி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கல்களைப் பகிர்ந்துள்ளனர். What actually works when it comes to fitness? Exercise, diet or genes?Here's a video of actor Nana Patekar in his gym. The fit actor died of cardiac arrest on Thursday morning at the age of 75.#nanapatekardeath #NanaPatekar https://t.co/iAnNKGgJc6— indulgexpress (@indulgexpress) October 8, 2026 இந்த நிலையில், நடிகர் நானா படேகரின் உடற்பயிற்சி விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலும் உடலைச் சரியாகப் பேணியவருக்கு எப்படி மாரடைப்பு நிகழ்ந்தது என பலரும் வருத்தமாக கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “நண்பர் நானா ஜி நம்முடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை” - ரஜினி இரங்கல் Following the passing of actor Nana Patekar, a video of him working out is going viral.