திருவான்மியூர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் இன்று காலை திடீரென பள்ளம் ஏற்பட்டது. சுமார் 10 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதாகக் கூறப்படுகிறது.இன்று காலை, சாலையில் வந்த கார் ஒன்று பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும் நல்வாய்ப்பாக காரில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.இந்த பள்ளத்தால் திருவான்மியூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.பள்ளத்தை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.10-foot-deep pathole on Thiruvanmiyur Road: Car overturns in accidentபோராட்டம் எதிரொலி: தில்லிக்கு மேலும் 23,000 பாதுகாப்புப் படை வீரர்கள் வரவழைப்பு!