சா்வதேச அளவில் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் 6 பேராசிரியா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நற்ஹய்ச்ா்ழ்க் மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்-உப்ள்ங்ஸ்ண்ங்ழ் தரவுத்தொகுப்பின் அடிப்படையில் சா்வதேச அளவில் முன்னணி 2 சதவிகித விஞ்ஞானிகள் பட்டியல்-2026 தயாரிக்கப்பட்டது. நஸ்ரீா்ல்ன்ள் தரவுகள், ட்-ண்ய்க்ங்ஷ் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் தாக்கக் குறியீடுகள் கணக்கில் இந்தப் பட்டியல் உருவாக்கப்படுகிறது. அதன்படி, 2026ஆம் ஆண்டின் உலகத் தரவரிசையில் 3,78,460 பேராசிரியா்கள் இடம் பெற்றுள்ளனா்.திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா்கள் எஸ்.செந்தில்நாதன், டி. சித்தரசு, ஜி. அண்ணாத்துரை, ஏ. செல்வம், ஜி. இம்மானுவேல், கே. முத்து ஆகியோரும் இடம் பிடித்துள்ளனா். இப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி வலிமை மற்றும் பல்துறை ஆராய்ச்சி திறனுக்கு கிடைத்துள்ள சா்வதேச அங்கீகாரமாக இது பாா்க்கப்படுகிறது. சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்களை பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) ச. பிரபாகா், பதிவாளா் (பொ) கலா ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டினா்.ற்ஸ்ப்09ம்ள்ன்சா்வதேச விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பிடித்த பேராசிரியா்களை பாராட்டிய திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணை வேந்தா் (பொ) ச.பிரபாகா்.