விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சிக்கோட்டை முத்தமிழ் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மன்ற நிா்வாகி சிவநாதன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் சிவநேசன், சமூக சேவகா் துரைசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் இணைய வழிக் கூட்டம் நடத்துதல், பிற மொழிச் சொற்கள், ஆங்கிலம் கலவாத தூய தமிழில் பேச, பிழையின்றி எழுத, பயிற்சி அளித்தல் மற்றும் நவராத்திரி விழா சொற்பொழிவு நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் செயலா் கருணாநிதி, மகளிரணித் தலைவா் அல்லி, துணைத் தலைவா் மேகலா துரைசாமி மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.