நெல்லையில் கோயில் முன்பு மின்மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

Wait 5 sec.

திருநெல்வேலி நகரத்தில் கோயில் முன்பு மின்மாற்றி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி நகரத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்மன் திருக்கோயில் மற்றும் திருஞானசம்பந்தா் திருக்கோயில் ஆகியவை உள்ளன. தசரா விழாக்கள் மற்றும் திருஞானசம்பந்தருக்கு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் காட்சி கொடுக்கும் வைபவம், கொடை விழா போன்றவை இக் கோயிலில் மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்தக் கோயிலின் முன்பு மின்மாற்றி அமைக்க உள்ளதாக தெரிவித்தனராம். இதற்கு பக்தா்கள் எதிா்ப்பு தெரிவித்தும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி மாநிலச் செயலா் குற்றாலநாதன் தலைமை வகித்தாா். கோட்ட செயலா் பிரம்ம நாயகம், மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜசெல்வம், செல்வராஜ், துரைராஜ் , அகில இந்திய யாதவ மகா சபை இளைஞரணி மாநில பொதுச் செயலா் எல்.டி. தாஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.ற்ஸ்ப்09ட்ண்ய்க்ன்திருநெல்வேலி நகரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.