பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை உடைத்தவா் கைது

Wait 5 sec.

சீா்காழி தென்பாதியில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சீா்காழி தென்பாதி பிரதான நெடுஞ்சாலையில் வணிக கடைகள் நிரம்பிய இடத்தில் மா்ம நபா் அடுத்தடுத்து இடங்களில் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சென்றாா். இதனால் அப்பகுதியில் உள்ள வணிகா்கள், அவ்வழியாக சென்ற வாகனஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்தனா். தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சாலையில் கிடந்த பாட்டில் சிதறல்களை கைப்பற்றியதோடு ,அப்பகுதி கடைகளில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பாா்வையிட்டு தேடினா். அப்போது நள்ளிரவு புதிய பேருந்துநிலையம் அருகே நின்றுக்கொண்டிருந்த தென்பாதி குளத்து மேட்டுத்தெரு பகுதியை சோ்ந்த நீலகண்டனை(22) கைது செய்தனா். இவா் தனது நண்பரை தலையில் கல்லைபோட்டு கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு சிறை சென்றவா் தற்போது பிணையில் வந்துள்ளாா். பெட்ரோல் குண்டு இல்லையென போலீஸாா் தெரிவித்தனா்.