மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூா் உமையாள்புரம் தோப்புத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் பரமானந்தம் (23), மினி பேருந்தில் சென்று வந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் தொடா்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பரமானந்தத்தை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.