திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய நோய் பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.திமுக பொதுச்செயலாளர் கே.அன்பழகன் மறைவுக்கு பின்னர் 2020-இல் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். தமிழகத்தில் நீண்டகாலம் சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த மூத்த அரசியல்வாதி. Former Minister Duraimurugan admitted to hospitalஇடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்தும் செய்தி!