மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “ஈரப்பதம் வந்துவிட்டால் பந்துவீச்சாளர்களுக்கு கடினம்” எனக் கூறியுள்ளார். இரண்டாவது டி20 கிரிக்கெட்டில் முதலில் இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 249 ரன்கள் எடுக்க, மேற்கிந்தியத் தீவுகள் 18.3 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து வென்றது.இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். இந்தத் தோல்வி குறித்து இந்தியாவின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியிருப்பதாவது: ஈரப்பதம் வந்துவிட்டால் பந்துவீச்சாளர்களுக்கு கடினம். 249 ரன்களையும் கிட்டதட்ட 2 ஓவர்களுக்கு முன்பாக சேஸ் செய்திருக்கிறார்கள். இந்தக் களத்தில் தவறுகள் செய்வதற்கான சலுகை மிகவும் குறைவு. சிறிது தவறினாலும் பந்து திடலின் அரங்கத்திற்குள் சென்றுவிடுகிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள். சில வாய்ப்புகளை தவறவிட்டோம். ஆனால், அதுதான் விளையாட்டு. சிறப்பாக பேட்டிங் செய்த எதிரணிக்கு வாழ்த்துகள். இந்தியாவில் அபிஷேக், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார்கள். மயங்க் யாதவும் சிறப்பாக பந்துவீசினார். அவர்களுக்கும் எனது வாழ்த்துகள் என்றார். ஹோப், ரூதா்ஃபோா்டு அதிரடி: மேற்கிந்தியத் தீவுகளுக்கு வரலாற்று வெற்றிIt becomes difficult when dew factor comes in: Shreyas Iyer