சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

Wait 5 sec.

ஜந்தர் மந்தர் போராட்டத்துக்காக வந்த அபிஜீத் தீப்கேவை விமானத்திலேயே வைத்து தில்லி காவல்துறை இன்று (அக். 10) கைது செய்துள்ளது.வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து, எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் என நாடுமுழுவதும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.இதைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டது. இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினரிடமிருந்து இன்னும் முறையான அனுமதி பெறவில்லை என்று சொல்லப்படுகிறது.இருப்பினும், தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. 27 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புகாகக் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தில்லியில் உள்ள பெரும்பாலான மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டு பல பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.இதையடுத்து, போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டாம் என தில்லி காவல்துறை மக்களுக்கு அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக மும்பையிலிருந்து விமானம் மூலம் தில்லி வந்த சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே, செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா உள்ளிட்ட சிஜேபி நிர்வாகிகளை தில்லி காவல்துறை விமானத்தில் வைத்தே கைது செய்துள்ளது.முன்னதாக, போராட்டத்துக்காக ஜந்தர் மந்தர் நோக்கி வந்த இளைஞர்களை தில்லி காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.சிஜேபி போராட்டம் எதிரொலி! எப்படியிருக்கிறது தலைநகரம்?The Delhi Police arrested Abhijit Deepke today (Oct. 10) right on the flight; he had arrived to participate in the Jantar Mantar protest.