தமிழ்நாட்டில் நாளைமுதல் மழை தொடங்கவுள்ளதாக மாநில அரசின் எல் - நினோ வல்லுநர் குழு உறுப்பினர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாட்டு பணிகளை மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக செய்து வருகின்றன.இந்த நிலையில், நாளைமுதல் மழை தொடங்கவுள்ளதாக பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது:”வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, வெயிலில் துணிகளை உலர்த்துவதற்கு இன்றைய நாளே மிகச் சிறந்த கடைசி நாளாகும்.நாளை முதல் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அக்டோபர் 15-ஆம் தேதியன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.எனவே, சென்னை மற்றும் தமிழக மக்களே, இன்றைய வெயிலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வானம் மேகமூட்டமாகி மழை பெய்யத் தொடங்கும் முன்பே உங்கள் துணிகளை உலர்த்திவிடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.Today is the last proper day to dry your clothes in the sunshine before the Northeast Monsoon kicks inRains are expected to start from tomorrow, and the monsoon onset is likely to be declared on October 15.So, Chennai and Tamil Nadu, make the most of today's sunshine! Get…— Tamil Nadu Weatherman (@praddy06) October 13, 2026Today is the last day to dry clothes! Rain starts tomorrow!திமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜி