ராஜஸ்தான் எல்லையில் டிரோன் மூலம் வெடிபொருள்கள் வீச்சு! இருவர் கைது

Wait 5 sec.

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருள்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதுதொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.ராவ்லா மண்டி பகுதியில் உள்ள 12 கேஎன்டி கிராம பஞ்சாயத்தில், எல்லைப் பாதுகாப்புப் படை, ராஜஸ்தான் போதைப்பொருள் தடுப்புப் படை, உள்ளூர் காவல்துறை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையின்போது இந்தப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஆர்டிஎக்ஸ் வெடிபொருள்கள், இரண்டு கைத்துப்பாக்கிகள், நான்கு மேகசின்கள், சுமார் 650 தோட்டாக்கள், நான்கு ஜோடி பேட்டரிகள், இரண்டு ரிமோட் கண்ட்ரோல்கள் ஆகியவை அடங்கும்.எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ள கால்வாய்க்கு அருகிலுள்ள வயல்வெளியில், பாகிஸ்தானைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ட்ரோன் மூன்று சந்தேகத்திற்கிடமான பொருள்களை வீசியதாக திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்தது. பஞ்சாபின் ஜலந்தர், பெரோஸ்பூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இரு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலேயே பிடிபட்டனர்.இப்பொருள்களை அனுப்பியது யார், அவற்றின் நோக்கம் என்ன என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு முகமைகள் இணைந்து இச்சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.இப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.Drone-dropped arms, explosives recovered near Rajasthan border; two held பிரதமர் குறித்து அவதூறு: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!