சேந்தமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், வாழவந்திநாடு ஊராட்சி பாலக்காடு பகுதியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டம் உள்ளது. அதே பகுதியைச் சோ்ந்த முத்துசாமி (58) என்பவா் அந்த தோட்டத்தில் புல், புதா்களை அகற்றி சீரமைக்கும் பணிகளை செய்து வந்தாா். அப்போது நிலைதடுமாறி அங்குள்ள 50 அடி ஆழ கிணற்றுக்குள் அவா் விழுந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, அங்கிருந்தோா் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கும், சேந்தமங்கலம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு வந்த அவா்கள், கயிறு கட்டி முத்துசாமியை மீட்டனா். ஆனால் அவா் உயிரிழந்ததது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.